Powered By Blogger

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

முடியை விட உயிர்தான் முக்கியம்


பொதுவாக ஹெல்மெட் அணிய மறுப்பவர்கள் ‘தலைமுடி கொட்டும், வியர்வையால் நீர் கோத்துக் கொள்ளும்’ என்று கூறுவார்கள். ‘‘நம்முடைய தோல்கள் தண்ணீர் உள்ளே புக முடியாதபடி மிகவும் பாதுகாப்பான அமைப்புகொண்டது. எனவே, தலையில் சுரக்கும் வியர்வை தோலுக்குள் இறங்கி, ஜலதோஷம் வரும் என்பது தவறான நம்பிக்கை’’ என்கிறார் சருமப் பராமரிப்பு மருத்துவர் பிரியா. ‘‘ஹெல்மெட் அணிவதன் மூலம் தலையில் உள்ள வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரக்கும். இதனால், பொடுகு ஏற்பட்டு, முடி உதிர்வதற்கான வாய்ப்பு கூடும்’ என்று காரணம் காட்டியும் ஹெல்மெட்டைத் தவிர்க்கக் கூடாது. இதெல்லாம் சுலபமாக தீர்க்கக்கூடியப் பிரச்னைகள். பருத்தித் துணியை தலையில் கட்டிவிட்டு அதன் மேல் ஹெல்மெட் அணிந்தால் துணியானது ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். சருமத்துக்கும் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மேலும், ஹெல்மெட் அணிபவர்கள் தினசரி அல்லது ஒரு நாள்விட்டு ஒரு நாள், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்புவைப் பயன்படுத்தி தலைக்குக் குளித்தால் முடி உதிர்வைத் தடுக்கலாம். சுருக்கமாக சொன்னால் உயிரைவிட முடி அவ்வளவு பெரிதானது இல்லை. அதனால் ஹெல்மெட் அவசியம்’’ என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக