Powered By Blogger

திங்கள், 1 அக்டோபர், 2012

பிதாமகர் பீஷ்மரை நினைத்தாலே நல்ல மழை பெய்யும் உடனே .... வீடுமர் அல்லது பீஷ்மர்

பிதாமகர் பீஷ்மரை நினைத்தாலே நல்ல மழை பெய்யும் உடனே ....
வீடுமர் அல்லது பீஷ்மர் மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர்.
.

பீஷ்மர் சாந்தனுவிற்கும் கங்கைக்கும் மூத்த மகனாகப்பிறந்தார்.
சாந்தனு துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த

அரசன் ஆவார்.
பீஷமர் அரசியலை தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் இருந்தும் வேதங்களை வசிஷ்டரிடம் இருந்தும் வில்வித்தையை பரசுராமரிடம் இருந்தும் கற்றுக்கொண்டார்.
.

தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, அரசாட்சியையும் துறந்தார்.
.

இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் போதே மரணம் என்ற வரமாகும்.

போரின் போது சிகண்டி என்பானை முன்னிறுத்தி பாண்டவ சேனை சண்டையிட,
.
.

பீஷ்மரோ அவன் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகது என்று தன்னுடலில் அம்பு தாக்கவும் திரும்பத்தாக்காமல் இருந்தார்.
.
.

ஆயினும் தன் தந்தையிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல், தன் உயிரை நீக்க விரும்பிய போதே உயிர்நீத்தார்.

மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹச்ர நாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.
.
.
பிதுர்வாக்கியபரிபாலனத்தில் ராமரையே வென்றவர். வாழ்நாள்முழுவதும் எந்தசுகத்தையும் அனுபவிக்கதவர்.
.
.
இன்று அவரை வணங்கி நினைத்தாலே நல்ல மழை பெய்யும்
.
.
பாண்டவர்களும்,
விதுரரும்,யுயுத்சுவும் சந்தனக்கட்டைகளாலும் மேலும் பல வாசனைப் பொருள்களாலும் சிதை அமைத்தனர்.
.

திருதிராட்டிரனும்,தருமரும் பிதாமகனின் உடலைப் பட்டுக்களாலும், மாலைகளாலும் போர்த்தி மூடினர்.
யுயுத்சு குடை பிடித்தான்.
பீமனும்,அர்ச்சுனனும்
சாமரங்கள் ஏந்தினர்.
நகுல, சகாதேவர்கள்
மகுடம் வைத்தனர்.
திருதிராட்டினனும், தருமரும்
காலருகே நின்றனர்.
குருவம்சத்து மாதர்கள் நாற்புறமும்
விசிறி கொண்டு வீசினர்.
ஈமச்சடங்குகள் சாத்திரப்படி நிறைவேறின.
புண்ணியமூர்த்தியின் சிதைக்குத் தீயிடப்பட்டது.
அனைவரும் வலம் வந்து தொழுதனர்.
எங்கும் சாந்தி நிலவ மழை பெய்தது." — அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை மற்றும் 4 பிறர் பேர்களுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக