Powered By Blogger

சனி, 29 செப்டம்பர், 2012

முதல் நூற்றாண்டின் வாசலில்...
கவிஞர் பா. விஜய்

இன்றிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்நோக்கி அழைத்துச் செல்லவிருக்கிறது இந்தத் தொடர். உலகில், இன்று பழையதாக இருக்கும் எதுவும் பழையதாகவே முடிந்து விடப் போவதில்லை. அதுவொருநாள் புதிய வடிவமெடுக்கும். இன்று புதியதாக இருக்கும் எதுவுமே புதியதாகவே இருந்துவிடப் போவதில்லை. அதுவொருநாள் பழைய வாசம் அடிக்கும்.

இன்று- விஞ்ஞானம், அறிவியல், பொருளாதாரம் என இம்மூன்றில் மட்டுமல்லாமல் உல்லாசம், உபரிச்செலவு, உற்சாக இரவு வாழ்க்கை என அத்தனையிலும் கொடிகட்டிப் பறக்கும் நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் எனும் அமெரிக்க-ஐரோப்பிய வாழ்வியலை, இன்றைய பூகோள முறைப்படி ஆரம்பிக்கும் கடல் கொண்ட லெமூரிய கண்டத்தின் நுனிவாயிலான குமரிக்கண்டத்தில் வாழ்ந்திருக்கின்றனர் நம் மூதாதையர்களின் மூதாதையர்கள்.

இன்று இருக்கும் எல்லாம் அன்றும் இருந்திருக்கின்றன. இன்று நிகழும் யாவும் அன்றும் நிகழ்ந்திருக்கின்றன. இன்று செய்யப்படுபவைகள் அனைத்தும் அன்றும் செய்யப்பட்டிருக்கின்றன.

அன்றைய காலகட்டத்தை இன்றைக்குப் படம்பிடித்துக் காட்டுவது சங்ககாலப் புலவர்களின் இலக்கியங்கள்தான்.

மாமூலனார், கபிலர் போன்ற பெரும் புலவர்களும், பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநானூறு, அகநானூறு போன்ற இலக்கியங்களும் இல்லாதிருப்பின் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியல் மிகப்பெரிய கறுப்புப் பக்கங்களாகவே காலத்தின் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கும்.

இன்று வளர்ந்தவொரு வல்லரசு நாடு மற்றொரு வளரும் நாட்டின் மீது தொடுக்கின்ற யுத்தம் மூன்று வகையாகும். ஒன்று - நேரடி நவீன ஆயுத யுத்தம்! இரண்டு - உள்நாட்டு அரசியல் குழப்பத்தை விளைவித்து ஆட்சியை மாற்றும் அரசியல் யுத்தம்! மூன்று - ஒரு நாட்டின் பொருளாதாரச் சந்தையை உடைக்கும் யுத்தம்! இம்மூன்று யுத்தங்களும் அன்றும் செய்யப்பட்டிருக்கின்றன.

1800 ஆண்டுகளுக்கு முன், எவ்விதம் இருந்தது தமிழகம் என்பதை காட்சிப்படுத்த விழைந்திருக்கிறேன். தமிழகத்தின் பெரும்பகுதியை பெருங்காலம் ஆண்ட சோழ சாம்ராஜ்யமே இத்தொடரின் மையப்பொருள். நிலப்பரப்பு தாண்டி, கடல் கடந்து வாணிபமும் படையும் கொண்டு சென்ற சோழர்களின் அரசியலை உற்றறிய வைக்கும் உலா இது!

வரலாற்றின் யதார்த்தத்தைப் பதிவு செய்வதற்குப் பதிலாக வர்ணனைகளால் மிகைப்படுத்தி வளர்த்ததே அன்றுமுதல் இன்று வரை எழுத்தாளர்களின் பயணமாக இருந்திருக்கிறது. வரலாற்றின் கழுத்துக்கு ஆபரணம்போல் இருந்திருக்க வேண்டிய கற்பனை நயம் தூக்குக் கயிறாய் இறுக்கி வந்திருக்கிறது. விளைவு? நமது தொன்மைகளைக் கூட யுனஸ்கோ வந்து தொன்மை என்று முத்திரையிடப்பட வேண்டிய சூழல்! (யுனஸ்கோ வந்து முத்திரையிட்டால்தான் நாம் ஏற்போம் என்பது நம் மரபணு வழிநேர்ந்த மனத்தாழ்வு நிலை).

கி.பி. 2 முதல் 12 வரை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயணம் செய்யப் போகின்ற இந்தத் தொடர், ஒரு வரலாற்று ஆய்வேடாக மாறிவிட்டால் சரித்திரம் படிக்கிற மாணவர்களுக்காக என்று சுருங்கிவிடும். ஒரு சரித்திர நாவலாகிவிட்டால், சுவாரஸ்யக் கதை சொல்லும் பாங்கிற்குள் விழுந்துவிடும். இரண்டையும் இணைத்துக் கட்டமைக்கும் முயற்சிதான் கடும்போராட்டமாக இருந்தது.

ஆயிரம் ஆண்டுப் பயணத்தை, சோழர்காலத்தைச் சுற்றி சொல்லமுற்படுகையில் சரித்திரப் பதிவுப் பிழைகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் காலக் குழப்பங்கள், இலக்கியங்களில் வெளியாகும் தகவல்கள், இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்களாக நின்று மூளையைக் கடினப்படுத்தின. தமிழ் மன்னன் என்றதுமே நம் மனக்கண்களுக்கு முன்னால் வரும் உருவம் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் ராஜகேசரி, ராஜகம்பீர ராஜராஜசோழன் உருவம்தான். ஐநூறு கிலோ நகைகளை அங்கம் முழுக்கப் பூண்டு அடுக்குத் தமிழும் உவமையும் கொஞ்சப் பேசிய நாடக வடிவம் நிஜ சரித்திரத்தை விட நெடுந்தொலைவு விலகி நிற்கிறது.

நமது திரைமொழியும் உரைமொழியும் வரலாற்றை மிகைப்படுத்தியும் பிழைவு செய்துமே பெரும்பான்மையாகப் பங்களித்து இருக்கின்றன. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைக்காவியத்தை நூறு முறைக்கும்மேல் பார்த்துப் பரவசித்திருக்கிறேன். கட்டபொம்மன் பேசும் கர்ஜனை தமிழ் கேட்டு அட்டைக்கத்தி ஏந்தி அறைகூவல் விடுத்து நடந்திருக்கிறேன். ஆனால் ஆய்வேடுகளை வாசிக்கையில் உண்மைக் கட்டபொம்முவிற்கு நான்கு வாக்கியங்கள் தமிழில் தொடர்ந்து பேசத் தெரியாது என்பதும் கட்டபொம்முவை விட ஜாக்சன் துறை தெளிவாகத் தமிழ் பேசுவார் என்பதும் அறிந்தபோது படம் சுருங்கியது. அதைவிட, கட்டபொம்முவின் தம்பியான துரை ஊமையாய்ப் பிறந்து ஏழுவித ஜாடையில் படை நடத்தும் ஆற்றல் பெற்றவர். ஊமை என்ற காரணத்தினால்தான் ஊமைத்துரை என்ற பெயரே அவருக்கு! ஆனால் திரைமொழியில் அவர், பக்கம் பக்கமாய் வசனம் பேசும் காட்சியைக் கண்டு உண்மை வரலாறு பரிகசிக்கிறது.

இவற்றை விளக்கினால் கூட, தமிழ்ப் பற்றில்லாதவன், தமிழர் வாழ்வின் பெருமை அறியாதவன் என்ற அட்டவணைக்குள் நம்மை அடைப்போர் அதிகம் இருப்பர். இருந்தாலும், அடுத்த தலைமுறைக்கு தமிழர்களின் யதார்த்த வாழ்வியலை, மிகைப்படுத்தப்படாத வரலாற்றைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இத்தொடருடைய காரணம்.

இதற்கு முன்னால் நான் எழுதிய சரித்திரக் காவியங்கள் வேறு, இந்தத் தொடர் வேறு! சொல் அலங்கார சூத்திரத்தைத் தேடி அலைந்து வார்த்தைப் பிரயோக வளையங்களில் வாசகர்களை வியப்பில் வீழ்த்த செய்யப்படுவது அல்ல இது! இந்தத் தொடர் கூடுமானவரையில் நமது தொன்மையை ஒரு நேரடி ஒளிபரப்பாய் செய்ய முற்படுகிறது. ஆனாலும் ஆங்காங்கே தமிழ் வீரத்தின் பெருமை பற்றிப் பேசும் போது சற்று ஏறி இறங்கிவிடுகிறது என் பேனா! (இதுவும் கவிஞர்களின் மரபணு வழி வந்த குணாதிசயம்தான்).

அதேபோல், நான் எழுதப் புகுந்த களம் பிரம்மாண்டமானது. இந்த பிரம்மாண்டத்தை பலர் பகுதி பகுதிகளாக தொகுத்திருக்கிறார்கள். நான் சற்று முழுமையாக்க முயற்சித்திருக்கிறேன், அவ்வளவுதான். இதிலும் பல தகவல்கள் சரித்திரச் சம்பவங்கள் விடுபட்டு நிற்கலாம். என் கண்பார்வைக்குக் கிடைத்திருக்கின்ற கிட்டத்தட்ட நூற்றிஇருபது புத்தகங்கள் வாயிலாக இந்தத் தொடரினைத் துவக்குகிறேன். சம்பவங்கள் எதுவும் விடுபட்டுப் போயின் எழுதி அனுப்புங்கள். சரித்திரம் என்ற சமுத்திரத்தை என் புகைப்படக்கருவியின் வில்லைக் கூர்மைக்குட்பட்ட பகுதியை மட்டும் படமெடுத்துத் தருகிறேன். ஒன்று உங்கள் கவனத்திற்கு... நிஜம் சிலசமயம் கசக்கவும் செய்யும், அதிசயிக்கவும் செய்யும்!

இந்தத் தொடருக்கு கடலலையென பாராட்டுகளும் கடுமைகூடிய விமர்சனங்களும் வருமென நான் எதிர்நோக்குகிறேன். இரண்டுமே வந்தால் இத்தொடர் வெற்றி!

துவக்கத்துடன்
பா.விஜய்

பாரதியின் அகராதி

பத்திரிகையாளராகவும் செயல்பட்ட பாரதியார், செய்திகளை மொழிபெயர்க்கவும், கட்டுரைகளில் பயன்படுத்தவும் சில ஆங்கிலச் சொற்களுக்குத் தாமே சிலதமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டார். அவற்றை ஆங்கில எழுத்துகளில் அகர வரிசையில் தொகுத்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் தன் கைப்பட எழுதி வைத்திருந்தார். இந்த நோட்டுப் புத்தகம்  புதுச்சேரியில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது (இப்போது அந்த நினைவு இல்லம் மூடப்பட்டிருப்பதால் பாரதிதாசன் நினைவு இல்லத்தில் அது உள்ளது). உதாரணத்திற்கு அந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து இங்கே சில:

E
Evolution    :    விஸ்தாரம், பரிணாமம்
Engineer    :    எந்திரி, எந்திரன்
Equipment   : ஸன்ணானம், முஸ்தீபு

F
Factor    :    குணாங்கம், அம்சம்
Fume      :    புகை, ஆவி
Fatigue    :    சோர்வு, களைப்பு, இளைப்பு, எத்தல்
Fraction  :    பின்னம், பாவம், அம்சம், சில்லறை
Formation : ஏற்பாடு, ஆகுதம், திறனாகை

G
Genius    :    மேதை

M
Millenium         :    ஆயிரம் வருஷம், தலத்ய யுகம்
Microscope    :    பூதக்கண்ணாடி, அணுதர்ஷனி
Method           :    கிரமம், விதம், நீதி, மார்க்கம், வழி,  உபாயம்
Modify            :    விகாரப்படுத்து,திரிபுசெய்,மாற்று,மட்டுப்படுத்து, குணப்படுத்து
Millemeter       :    மில்லி மேத்தர். மேத்தரில் ஆயிரத்தில் ஒரு பங்கு

இருவர் இல்லம்

பெரியாரும் அண்ணாவும் ஒரே வீட்டில் சில காலம் வாழ்ந்தார்கள். அந்த வீடு ஈரோட்டில் இப்போதும் இருக்கிறது.1940ல் பெரியாரின் அழைப்பின் பேரில்  அண்ணா  ஈரோடு சென்று, ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ‘குடியரசு’ அலுவலகத்தை ஒட்டி அண்ணா தங்குவதற்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டது. மூன்று வேளை பெரியாரோடு சாப்பாடு.

 முகப்பைத் தாண்டியதும் ஒரு பெரிய கூடம். அதை ஒட்டி ஒரு சிறு அறை. அந்த  அறையை அடுத்து அச்சகம் எனக் ‘குடியரசு’ அலுவலகம் அமைந்திருந்தது. கூடத்தில் உட்கார்ந்து பெரியார் எழுதுவார், வருகிறவர்களைச் சந்திப்பார்.  அண்ணா அந்தச் சிறு அறைக்குள் அமர்ந்து பணிகளை மேற்கொள்வார்.

பெரியாருக்கு 12.00 மணிக்கு  மதிய உணவு  சாப்பிடும் வழக்கம். 12 மணி ஆனதும் தமது கைத்தடியால் அருகிலுள்ள அறையில் தொங்கும் திரைச் சீலையை விலக்கிக்கொண்டு, அண்ணாவிடம், ‘என்னங்க அண்ணாத்துரை! சாப்பிடப் போகலாமா?’ என்று கேட்பார். அதுவரை எழுதுவதற்கு மூடு வராமல் படம் வரைந்து கொண்டிருந்த அண்ணா, பணிவாக, ‘இல்லை அய்யா, இனிமேல்தான் தலையங்கம் எழுதவேண்டும்’ என்பார். அதற்குப் பெரியார் அவர்கள் சற்றுக் கோபமாகவே, ‘இவ்வளவு நேரம் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்பார். அதற்கு அவர், ‘இந்து’ பத்திரிகையில் நம்மைப் பற்றி வந்திருக்கிறது அதற்குப் பதில் எழுத வேண்டும். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்பார். உடனே பெரியார், ‘இதிலென்ன யோசனை வாழுது? அந்தப் பத்திரிகையில் இருக்கிறதை அப்படியே எடுத்துப்போட்டு, இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று ஒருவரியில் எழுதிட்டுப் போக வேண்டியதுதானே?’ என்று கோபித்துக் கொள்வார்.  அதற்கு அண்ணாவின் பதில் ஒரு புன்முறுவல்தான். 

நஷ்டம் காரணமாக  1942ல் ‘குடியரசு’ இதழ் நிறுத்தப்பட்டது. அண்ணா காஞ்சி திரும்பி, ‘திராவிட நாடு’ வார இதழைத் தொடங்க விரும்பினார்.  அந்த யோசனையை வரவேற்ற பெரியார், ‘குடியரசு’ இதழுக்குப் பயன்படுத்தப்பட்ட சில அச்சு எழுத்துகள், பெட்டிகள், அலமாரிகள் முதலிய பொருட்களை அண்ணாவுக்கு கொடுத்துதவியதோடு, நூறு ரூபாய் நன்கொடையும் அளித்தார்.

பெரியாரும் அண்ணாவும் சேர்ந்து வாழ்ந்த அந்த வீடு இப்போது நினைவகமாக இருக்கிறது. அந்த வீட்டில் இடம் பெற்றுள்ள பெரியாரின் இறுதி வாசகம்: உலகத்திற்கே நாம் வழிகாட்டிப் போவோம். நாம் புது உலகம் காண்போம். இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய சக்தி உடையவர்களாக இருப்போம்.’

சாப்ளினின் சந்திப்பு

‘நான் அந்த அறைக்குள் நுழைந்தபோது கையிலிருந்த தந்தியைக் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் காந்தி. அவரைச் சந்திக்க நேரம் கேட்டு தந்தி அனுப்பப்பட்டிருந்தது.‘யார் இது?’ என்று தந்தியை அவரது செயலாளரிடம் காட்டி விசாரித்துக் கொண்டிருந்தார். ‘சினிமா நடிகர், நகைச்சுவை நடிகர்’ என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். ‘நான் அவசியம் சந்திக்கத்தான் வேண்டுமா?’ என்றார் காந்தி. நான் தந்தியை எட்டிப் பார்த்தேன். அனுப்பியவர் பெயர் சார்லி சாப்ளின் என்று இருந்தது. சார்லி சாப்ளின்! அவர் உலகின் மிகப் பெரிய ஹீரோ! ‘நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும்!’ என்றேன். ‘அவர் படங்கள் எல்லாம் உழைக்கும் மக்களைப் பற்றியவை. உங்களைப் போலவே ஏழைகளிடம் பரிவு கொண்டவர்’என்று சொன்னேன். காந்தி சந்திக்க ஒப்புக் கொண்டார்’என்று அந்த அபூர்வ சந்திப்பை Entertaing Gandhi’என்ற தனது நூலில் விவரிக்கிறார் மரியல் லெஸ்டர். வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது காந்தி அவரது வீட்டில்தான் தங்கியிருந்தார்.

1931ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி டாக்டர். கட்டியால் என்ற நண்பரின் வீட்டில் காந்தி, சாப்ளின் இருவரும் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பில் அவர்கள் என்ன பேசினார்கள்? 1931ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதியிட்ட ‘டைம்’ வார இதழ் அதைக் குறித்து செய்தி வெளியிட்டது. அதில் சாப்ளின், காந்தியிடம்  அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதகுலத்திற்குக் கிடைத்த கொடை. இயந்திரங்கள் மனிதகுலத்தை அதன் சுமைகளிலிருந்து விடுவிக்கும். நீங்கள் ஏன் இயந்திரங்களை எதிர்க்கிறீர்கள்?’ என்று சாப்ளின் கேட்டார். ‘நவீன இயந்திரங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டால் அவை எங்கள் மக்களுக்கு நிறைய ஓய்வளித்து அவர்களைச் சோம்பேறியாக்கிவிடும். அவை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து, அவை ஏற்றுமதி செய்யப்பட்டு உலகின் வேறு எங்கோ உள்ள மக்களையும் சோம்பேறியாக்கும்’என்று காந்தி பதில் சொன்னதாக ‘டைம்’தெரிவிக்கிறது. பேசிக் கொண்டிருக்கும்போது மாலை 7 மணி ஆனதால் பிரார்த்தனை செய்யத் தயாரானார் காந்தி. ‘நீங்களும் கலந்து கொள்கிறீர்களா?’ என்று கேட்டதும் சாப்ளின் அவரது மத வழக்கப்படி மண்டியிட்டார். காந்தி தரையில் அமர்ந்து கொண்டார். பிரார்த்தனை நீண்டுகொண்டே போனதால், நீண்ட நேரம் சாப்ளினால் முழங்காலில் மண்டியிட்டு  இருக்கமுடியவில்லை. தள்ளாட ஆரம்பித்தார். ‘நீங்கள் வேண்டுமானால் சோபாவில் அமர்ந்து கொள்ளுங்கள்’என்றார் காந்தி.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த சாப்ளினிடம் காந்தியைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ‘பயங்கரமான மனிதர்! (tremendous personality, tremendous!) என்றார் சாப்ளின். காந்தியோடு இயந்திரங்களின் தேவை பற்றி வாதிட்ட அதே சாப்ளின்,பின்னாளில் இயந்திரமயமான வாழ்க்கையை மையமாகக் கொண்டு,‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படத்தை தயாரித்தார்!

போசின் சினம்

‘இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஆங்கிலேயர்களுக்கு எதிரணியில் இருந்த ஜெர்மனியின் ஆதரவைக் கோரி, ஹிட்லரைச் சந்திக்க சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனிக்குச் சென்றார். ஓராண்டு காலம் காக்க வைத்தபின் ஹிட்லர், போசை 1942ம் ஆண்டு மே 27ம் தேதி சந்தித்தார்.

ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இந்தியா நான்கும் ஓரணியில் நின்று ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடலாம் என்ற போசின் யோசனையை ஹிட்லர் பெரிய உற்சாகத்தோடு வரவேற்கவில்லை. அப்போது இங்கிலாந்தோடு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளும் முயற்சியில் இருந்த ஹிட்லர், இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவாக அறிக்கை விட மறுத்துவிட்டார்.

இந்தியாவிற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தச் சொல்லி ஆலோசனை சொன்னார். இந்தச் சந்திப்பின்போது காந்தி, நேரு இருவரையும் ஹிட்லர் விமர்சித்ததையடுத்து,  ‘நான் என் வாழ்நாள் முழுதும் அரசியலில் இருந்திருக்கிறேன். உங்கள் அதிபரை எனக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டாம் எனச் சொல்லுங்கள்’ என்று ஹிட்லரின் உதவியாளரிடம் கடுமையாகச் சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறினார் போஸ்’ என்கிறது, Rudolf Hartog   என்பவர் எழுதிய  ‘¬¬The Sign of the Tiger' ’ என்ற புத்தகம்.

நூலாசிரியர் ஜெர்மனியில் போஸ் உருவாக்கிய இந்தியன் லீஜன் என்ற அணியில் 18 வயதில் தன்னை இணைத்துக்கொண்ட ஜெர்மானியர்.

காந்தியின் தமிழ்!

தென்னாப்ரிக்காவில் காந்தியின்  நண்பராக விளங்கி, பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லால் இருந்தபோது காந்திஜி தென்னாப்ரிக்காவிலிருந்து 10 ரூபாய் அனுப்பினார். அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு, தமிழில்  கையெழுத்திட்டிருக்கிறார் காந்தி!

 தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதி அனுப்பினார் காந்தி.

இந்திராவின் புடவை!

பெண்களுக்குப் புடவை என்றால் ஒரு தனி விருப்பம். அதிலும் கல்யாணப் புடவை என்பது ரொம்ப ஸ்பெஷல். இந்திரா காந்திக்கும்தான். ஏனெனில் அவரது திருமணப் புடவை அவரது அப்பா சிறையில் இருந்தபோது நூற்ற நூலில் நெய்தது. அதை ராஜீவ்  கல்யாணத்தின்போது  சோனியாவிற்கு அளித்தார் இந்திரா. அதை அணிந்துதான் அவரது திருமணம் நடந்தது. அதைப்போல தனது தாய், தனக்கு முதன் முதலில் வாங்கிக் கொடுத்த கடல் நீல நிறத்திலான புடவையை மேனகாவிற்குக் கொடுத்திருந்தார். மேனகாவின் மகன் வருண் காந்தி, யாமினி என்ற வங்காளப் பெண்ணை மணக்கவிருக்கிறார். யாமினி திருமணத்தின்போது இந்திரா கொடுத்த புடவையைத்தான் அணியவிருக்கிறார். தலைமுறைகள் தாண்டுகிறது சேலை.

வேலுநாச்சியாரின் வாள்

5,000 குதிரை வீரர்களையும் 5,000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் தலைமை தாங்கி நடத்திச் சென்று 1780ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றவர் சிவகங்கை அரசி வேலு நாச்சியார். இந்தப் போரின்போது அவருக்கு வயது 50.

இந்தப் போரின் மூலம் அவரால் சிவங்கை அரசின் ஒரு முக்கிய நகரான காளையார் கோயிலைத்தான் மீட்க முடிந்தது. சிவகங்கையை மீட்க பெண்கள் படை ஒன்று நவராத்திரி விழாவிற்காக அரண்மனையில் கூடிய மக்கள் கூட்டத்தில் மாறுவேடத்தில் ஊடுருவியது. அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்துக்கொண்டு  வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தார்.

பல மொழிகள் அறிந்தவர் வேலு நாச்சியார். அவர் பயன்படுத்திய வாள் இப்போதும் சிவகங்கை அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

காமராஜரின் அம்மா!

லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் அக்டோபர் 2  (1904). காமராஜர் மறைந்த தினம் அக்டோபர் 2 (1975). இருவரும் இருக்கும் அபூர்வப் படம் இது. இது இன்னொரு விதத்திலும்  அபூர்வமானது. சாஸ்திரியின் அருகில் நிற்பவர் காமராஜரின் அன்னை. பாம்படம் என்னும் கனமான காதணி அணியும் மூதாட்டிகள் இப்போதும் இருக்கிறார்களா?

அண்ணாவின் ஓவியங்கள்

‘‘கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்துவிட்டுக் காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்தவர்களுக்குக் கூட, இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. மிகக் கஷ்டப்பட்டு நாலு நாள் லீவு பெற்றாலும், குழந்தைக்கு மொட்டை அடிக்கத்திருப்பதிக்கோ, அம்மா சிரார்த்தத்துக்கு காவிரிக்கோ போய் வருவார்களேயொழிய, களிப்புக்காக, இயற்கை தீட்டிக் காட்டும் இனிய ஓவியங்களை காணச்செல்பவர் இரார்.’’

இதைச் சொன்னது யார் என்று ஊகிப்பது கடினமில்லை. நடையே சொல்லிவிடும். இவை அண்ணாவின் வார்த்தைகள்.  அண்ணாவிற்கு  ஓரளவுக்கு ஓவியம் வரையவும் தெரியும். அருகில் இருப்பது அவர் வரைந்த இயற்கைக் காட்சி. அண்ணா அவர் வரைந்த ஓவியங்களை அவ்வப்போது அவர் நடத்திய காஞ்சி இதழில் வெளியிடுவதும் உண்டு,  இங்கே வெளியாகியுள்ள 30.8.1964 தேதியிட்ட காஞ்சி இதழின் அட்டைப் படம் ஒரு சான்று...

பில்கேட்சின் கணினி!

இன்று பல கணினிகளின் இயக்கத்தைத் தீர்மானிக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் தனது முதல் கணினியை செகண்ட் ஹாண்டாகத்தான் வாங்கினார். அவர் படித்த பள்ளியிலிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் அன்னையர் சங்கம் வைத்திருந்தார்கள். அதற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு கழித்துக் கட்டும் சேல் நடந்தது. அவரவர் வீடுகளிலுள்ள வேண்டாத பொருட்களை ஒரு பொது இடத்தில் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அவற்றைத் தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இதை காராஜ் சேல் என்று சொல்வது வழக்கம். இந்த சேலில் எந்தப் பொருளையும் மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கலாம். பில்கேட்ஸின் முதல் கணினி (Teletype Model 33 ASR) terminal அப்படித்தான் வாங்கப்பட்டது. அதில் அவர் எழுதிய முதல் புரோகிராம் ஒரு விளையாட்டு.அவருக்கு அப்போது வயது 13.

மருதுவின் வளரி

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பூமராங் என்ற ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துவது உண்டு. வீசி எறிந்தால் இலக்கைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பி வந்து வடும் வளைந்த தடிதான் பூமராங்.

தமிழர்களும் அதைப் போன்ற ஒரு வளைதடியைப் பயன்படுத்தினார்கள். அதன் பெயர் வளரி, தர்ஸ்டன் என்ற வரலாற்றாசிரியருக்கு புதுக்கோட்டை திவானாக இருந்தவர் எழுதிய கடிதத்தில், வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல் பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும்.. இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும்’ என்று வளரியைப் பற்றி விவரிக்கிறார்.

சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களில் இளையவரான சின்ன மருது, வளரி எறிவதில் வல்லராக விளங்கினார். கர்னல் வெல்ஷ் என்ற ஆங்கிலேயே ராணுவ அதிகாரி  எழுதியுள்ள, ‘எனது நினைவுகள்’ என்னும் நூலில், ‘சின்ன மருதுதான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தார். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளார். நண்பனாகப் பழகிய இந்த வெல்ஷ்தான் பின்னாளில் சின்ன மருதுவைத் தூக்கிலிட்டவர்!

மருது சகோதரர்களது வளரிகளை இப்போதும் காளையார் கோயிலில் உள்ள அவரது நினைவிடத்தில் பார்க்கலாம்.

அன்னபூரணியின் பயணம்!

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள  வல்வெட்டித்துறை துறைமுகத்திலிருந்து 1933ல் அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்மரக் கப்பல், வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசேச்சூசெட்சைச் சென்றடைந்தது. இந்தக் கப்பல் யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.

லெப்டிணன்ட் வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811ல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து, பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்து தீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

- சாத்தான்குளம் அ.ராகவன்  எழுதியுள்ள, ‘நம் நாட்டுக் கப்பற்கலை’ என்ற நூலில் இருந்து.

ராபர்ட் புரூசின் கோடரி!

முதன் முதலில் மனித இனம் தோன்றியது எங்கே? அது சென்னையாக இருக்கக் கூடும்! 150 ஆண்டுகளுக்கு முன்னர் ராபர்ட் புரூஸ் ஃபூட் எனும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டு இன்றைக்கு சாந்திபப்பு என்கிற தொல்லியல் ஆய்வாளர்கள் வரை  மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு இது

ஆதாரம்? பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்காலக்கருவிகள்.

ஆங்கிலேயர்கள் நம்மை அதிகாரம் செய்துகொண்டிருந்த காலத்தில் அவர்கள் எந்த வேலை செய்தாலும் ராணுவப்பயிற்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. சென்னை பல்லாவரம் மலைக்கருகே உள்ள ராணுவப் பயிற்சி முகாமில் ராபர்ட் ப்ரூஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிறிது தூரத்தில் பறந்துவிழுந்த குண்டினைத் தேடியபோது ஒரு வித்தியாசமான கல்லொன்றைக் காண்கிறார். அது வெறும் கல்லாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து ஆராய்ச்சி செய்கிறார். புவியியல் வல்லுநரான அவர் அது பழங்கற்காலக் கோடரி என்பதை உறுதி செய்கிறார். இது நடந்தது 1863ல்.

நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், கிட்டத்தட்ட தென்னிந்தியாவில் 400க்கும் மேலான இடங்களில் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்தக் கருவிகள் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று கற்காலக் கருவிகளின் காலஅளவை கணக்கில் கொள்ளாமல் முதலில் கூறப்பட்டது. பின்னர் தொல்லியல் காப்பாளர் டி.துளசிராமன் ஐந்து லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றார். ஆனால் தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று முனைவர் சாந்திபப்பு நிரூபித்திருக்கிறார். சாந்திபப்புவின் தொடர் ஆராய்ச்சியில் ஒரு மில்லியன் ஆண்டுகள் முதல் 1.5 மில்லியன் ஆண்டுகள் வரையிலான பழங்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ‘சைன்ஸ்’ என்ற அறிவியல் இதழிலும் வெளிவந்திருக்கிறது.