Powered By Blogger

வெள்ளி, 17 மே, 2013

வீடு கட்ட  பிளான் இலவசம்

சும்மாவா சொன்னார்கள், ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்’ என்று. சொந்தமாக வீடு கட்டி, குடிபுகுவது என்பது, 21-ஆம் நூற்றாண்டில் பலருக்கும் அது வாழ்நாள் கனவாகிப்போனது. புதிதாக வீடு கட்டுபவர்கள், தங்களுடைய வீடு இப்படித்தான் அமைய வேண்டும் என்ற ஆசைகளுடன், கனவுகளுடன் இருப்பார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப் போகும் வீட்டுக்கு மிக முக்கியமானது, வடிவமைப்புத் திட்டம். நாம் கட்டப் போகும் கனவு இல்லத்திற்கு கட்டிடப் பொறியாளாரிடம் திட்ட வடிவம் போட்டு வாங்குவதற்கு மாற்றாக, நாமே கூட திட்ட வடிவம் போட்டுப் பார்க்கலாம். இதோ, ‘ஸ்மால் ப்ளூ பிரிண்டர்’ என்ற இணையதளம் இந்த அற்புதமான வசதியை இலவசமாக வழங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் டோல் என்பவர் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தளத்திற்கு சென்றவுடன் முகப்புப் பக்கத்தில் Design, Isometric View, 3D Walk through மற்றும் Print போன்ற இணைப்புகள் இருக்கும். முதலில், Design திறக்கும். இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  ப்ளூ பிரிண்ட் பிளான் பற்றி சரியாகத் தெரியாது என்றால், Sample Planஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து வலப்பக்கம் இருக்கும், Add Wall  இணைப்பைச் சொடுக்கி, எங்கெங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம். அறைச் சுவர், வெளிச் சுவர், போர்டிகோ ஆகியவற்றை இந்த டூல் மூலம் அமைத்து விடலாம். அதேபோல் Add Door, Add Window  இணைப்புகளைச் சொடுக்கி, எங்கு கதவு வேண்டும், எங்கு ஜன்னல் வைக்க வேண்டும் என அனைத்தையுமே எளிதாக வைத்துக் கொள்ளலாம். Transform என்ற இணைப்பைப் பயன்படுத்தி இதுவரையில் வடிவமைத்ததை மாற்றியமைக்கலாம் அல்லது நகர்த்திக்கொள்ளலாம். இறுதியாக,Isometric View  மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுங்கள். இப்போது திட்ட வடிவம் நிறைவடைந்திருக்கும். கடைசியாக திட்ட வடிவத்தை ஓர் பார்வை பார்த்துவிட்டு, பிளான் திருப்தி என்றால், பிரிண்ட் கொடுங்கள்.

இதே இணையதளம், தோட்டம் மற்றும் தரைத்தள வடிவமைப்புக்கும் பிளான் போட்டுத்தருகிறது. இந்தத் தளத்தைப் பயன்படுத்த உறுப்பினர் கணக்கு தொடங்க வேண்டியதில்லை. தனியே எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யவும் அவசியமில்லை. ப்ளூ பிரிண்ட் பிளான் பற்றி நன்கு தெரிந்தவர்கள், இத்தளத்தில் பிளான் தயாரித்து, அப்ரூவல்கூட வாங்கிவிடலாம்.

அதேபோல், புது வீட்டில் என்னென்ன பொருட்களெல்லாம் அத்தியாவசியத் தேவை, எந்தெந்தப் பொருட்கள் இருந்தால் வீடு அழகாக இருக்கும், எந்தெந்த நிறுவனங்கள் அந்தப் பொருட்களைத் தயாரிக்கின்றன என்பது போன்ற இல்லப் பராமரிப்புக்குத் தேவையான தகவல்களை www.householdproducts.nlm. nih.gov என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதேபோல், வீடு மற்றும் அலுவலகங்களை அலங்காரம் செய்ய, வடிவமைப்பை மாற்றம் செய்ய, நிறைய இணையதளங்கள், மென்பொருட்கள் இலவசமாகவே திட்டம் அமைத்துக்கொடுக்கின்றன.

நீங்களே பிளானை உருவாக்க இணையதள முகவரி: www.smallblueprinter.com/sbp.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக