Powered By Blogger

வியாழன், 21 மார்ச், 2013

பெண்களுக்கு நீதி

வேறுபாடுகள் நிறைந்த நமது சமூக அமைப்பில் பொதுவான இழிவுகள் ஒருபுறமிருக்க, எல்லாக் குடும்பங்களிலும் எப்போதும் இரண்டாம் குடிமக்களாகவே பெண்களும் பெண் குழந்தைகளும் கருதப்படுகின்றனர். பெண்ணைப் போற்றி முதன்மைப்படுத்தி வளர்க்கும் ஏதாவது ஒரு குடும்பத்தைத் தேடிப்பிடித்து உதாரணமாகக் காட்டலாமே தவிர, எல்லாக் குடும்பங்களிலும் பெண் குழந்தைகள் ஆற்றல் பெறும் விழிப்புணர்வுடன் வளர்க்கப்படுகிறார்களா என்றால், நிச்சயமாக இல்லை. வீரலட்சுமி, தைரியலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி, ராஜலட்சுமி என்றெல்லாம் பெண்களுக்கு பெயர் சூட்டுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்தக் குழந்தைகள் அப்படிப்பட்ட லட்சுமிகளாக வளர்க்கப்படுகிறார்களா என்றால் இல்லை. அந்தக் குணாம்சங்கள் எல்லாம் பெயரில் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

பெரும்பான்மையான குடும்பங்களில் இரண்டாம்பட்சமாகப் பெண்கள் இருப்பதையே ஆண்கள் மறைமுகமாக விரும்புகின்றனர். குடும்பத் தலைவர்களின்  இந்த மனநிலை, பெண் குழந்தைகள் வளர்ப்பினிலும் பிரதிபலிக்கிறது.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்தந்த வேலைகளை பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற ‘நியதிகள்’ பெண் குழந்தைகளின் சிறிய வயதிலேயே கற்பிக்கப்படுகின்றன. கிராமங்களில் பெற்றோர்கள் தினமும் அதிகாலையில் கூலித்தொழிலுக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் உள்ள பெண் குழந்தைளோ பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தண்ணீர் பிடித்து வைத்து, துணி துவைத்து, சிலர் தம்பிப் பாப்பாக்களை தூக்கிச் சென்று அங்கன்வாடியில் விட்டுவிட்டு, பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறார்கள். ‘வீட்டில் நீ இவ்வளவு வேலைகள் செய்கிறாயே, உன் அண்ணன் என்னென்ன வேலைகள் செய்வான்?’ என்று 3ம் வகுப்பு படிக்கும் என்னுடைய மாணவி சந்தியாவிடம் கேட்டேன். ‘அவன் சாப்பிடுவான், விளையாடுவான், தூங்குவான், அப்புறம் கொஞ்ச நேரம் படிப்பான். அதைக்கூட ஒழுங்கா செய்ய மாட்டான்’ என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் சந்தியா. பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகள் வளரும் விதம் இதுதான்.

ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைதான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் படிப்பு மற்றதெல்லாம். வீட்டு வேலைகளில் பெண் குழந்தைகள் தவறிழைக்கும்போது, ‘நீயெல்லாம்  எங்க போயி மொத்துப்படப் போறியோ?’ என்பது போன்ற வசவுகள் சகஜமானது. ‘ஆணுக்கு அடங்கி வாழ வேண்டும்’ என்கிற சிந்தனை ஊட்டி வளர்க்கப்படும் பருவமும் இதுதான்.  

ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என எல்லா செலவினங்களும் முதலீடாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், பெண் வளர்ப்பு, படிப்பு மற்றும் அவளது திருமணம் என அனைத்தும் செலவினங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. காலம்காலமாக நிலவி வரும் இந்தப் பாகுபாட்டுச் சூழலைக் கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலும் பார்க்க முடிகிறது.

பெண் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே பார்க்கப்படுவதில்லை. அவர்களும் கூட பெண்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். எனவேதான் தன் வயதொத்த சிறுவர்களோடு வெளியில் சென்று விளையாடுவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், விளையாட்டுப்பருவம் என்பதே பெண் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பழமொழிகளும், உவமைகளும் அவர்களை ஒருபோதும் தங்களை கௌரவத்திற்குரிய மனிதப்பிறவி என்பதைக்கூட உணரவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.

குழந்தைத் திருமணம் என்பது சட்டவிரோதம் என்றாலும்கூட, அந்த சமூகக்கொடுமை நாட்டின் ஒருசில பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.13 வயது, 15 வயது பெண் குழந்தைகளை 30 வயது, 40 வயது ஆண்களுக்கு திருமணம் செய்துகொடுக்கும் அவலம் இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. புத்தகப்பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் கருவைச் சுமக்கும் பரிதாப நிலைக்கு அக்குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். குழந்தைத் திருமணத்தால் பலரின் வாழ்க்கை, பாதியிலே முடிந்துவிடுகிறது.

கடைசிக் காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுபவர்கள் ஆண் குழந்தைகள் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. ஆனால், வயதான பெற்றோர்களைப் பாதுகாப்பது ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிகம் என்பது இன்றைய யதார்த்தம்.

கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த தில்லி மாணவி நிர்பயா, ஒருதலைக் காதலால் திராவக வீச்சுக்கு ஆளாகி துடிதுடித்து இறந்த வினோதினி, வித்யா... சமீபத்தில் நமது ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கி எடுத்த சம்பவங்கள் இவை.

கோயமுத்தூரில் தந்தை மற்றும் தாத்தா வயதையொத்த கயவர்களால் கற்பழிக்கப்பட்ட 15 வயது சிறுமி, வரதட்சணைக் கொடுமையால் வலுக்கட்டாயமாக திராவகம் குடிக்க வைக்கப்பட்டு உயிரிழந்த வாணியம்பாடி கோமதி. இப்படி ஒவ்வொரு நாளும் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் வெளிவந்து, நமது இதயத்தை அதிரச் செய்கின்றன. ஆனால், இவையெல்லாம் ஊடக வெளிச்சத்தில் நம் கண்களுக்குத் தெரியும் சில உதாரணங்கள்தான். இன்னும் எத்தனை எத்தனை பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள், குடும்ப மற்றும் சமுதாய வன்முறைகளை மௌனமாக தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! நமது ஊர்களில், தெருக்களில், நமது அண்டை வீடுகளில்...ஏன் சற்று உற்று நோக்குங்கள்...நமது இல்லங்களில்கூட...

சமீபத்தில் என் நெருங்கிய தோழி ஒருவர், இரண்டாவது முறையாக பிரசவித்தார். கர்ப்பம் தரித்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் மனதளவில் அவர் அனுபவித்த மனஉளைச்சல் சொல்லி மாளாது. காரணம், முதலில் பிறந்தது பெண் குழந்தை. இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்து விட்டால், கணவரும் மாமியாரும் என்ன சொல்வார்களோ என்ற பயம். என் தோழியும் அவள் அம்மாவும் வேண்டாத தெய்வமில்லை. ஆனால், இயற்கையின் கணக்கை யாரால் மாற்ற முடியும்? இரண்டாவதும் அழகான பெண் குழந்தை பிறந்தது. மருத்துவர் வந்து அறிவித்ததும் பிரசவ வார்டின் வெளியே காத்திருந்தவர்களின் முகங்கள் ஒரு நொடி சுண்டியது. தனது வருகை, உறவுகளின் மத்தியில் எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு.

கருவுற்ற காலத்தில் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிப்பது தந்தையின் குரோமசோம்கள்தான் என்பது படித்தவர்கள் அறிந்ததே. ஆனாலும் ஆண் குழந்தையைத்தான் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பெண்ணை நிர்பந்திப்பதும் மாறாக பெண் குழந்தை பிறந்து விட்டால், அந்தப் பெண்ணை குற்றவாளியைப்போல நடத்துவதும் படித்தவர்கள் மத்தியிலும் நடக்கிற ஒரு பெரிய கொடுமை.

பெண்களுக்கு ஆதரவாக எத்தனையோ சட்டங்கள் நமது நாட்டில் உள்ளன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றப்பதிவுகளின் துறையின் (nationala records bureau) புள்ளி விவரங்கள், இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள், ஒவ்வொரு 58 நிமிடங்களிலும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழக்கிறாள் என்று சொல்கிறது. Reuter நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில், பெண்கள் வசிக்கத் தகுதியில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாகக் கூறுகிறது.

சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் பெண்களைப் பற்றிய பார்வை ஓர் ஆணுக்கு எங்கிருந்து முதலில் உருவாகிறது? வீடுகளில் இருந்துதானே?

ஓர் ஆண் குழந்தை வளரும்போது தன் தந்தை, தாயை எப்படி நடத்துகிறார் என்று பார்க்கிறான். காலையில் தந்தை ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருக்க...வீட்டு வேலைகளை அரக்கப் பரக்கச் செய்து, கணவனை அலுவலகத்திற்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் அனுப்புவதிலிருந்து இரவு கடைசி ஆளாக உறங்கச் செல்லும் தாயை அந்த ஆண் குழந்தை எப்படிப் பார்ப்பான்? எத்தனை வீடுகளில் பெண்கள், தங்கள் கணவனால் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்? மனைவியை அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகத்தானே இன்னும் இங்கு இருக்கிறது? இதைப் பார்த்தே வளரும் சிறுவன், பெண் என்பவள் அவனுக்கு அடங்கிப் போக வேண்டியவள் என்றுதானே நினைப்பான்? ஒரு பெண்ணை தாயாக, சகோதரியாக, தோழியாக, சக மனுஷியாக மதித்து நடக்கும் பண்பை முதலில் வீட்டிலும் அடுத்து, பள்ளியிலும் கற்றுத்தர முடியும்.

எனது மகள் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, ஒருநாள் திடீரென்று சாப்பிடாமல் முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள். ‘இனிமே நீங்க வேலைக்குப் போகக் கூடாது. கிச்சன்ல நீங்கதான் சமைக்கணும்’ என்று என்னிடம் பிடிவாதம் பிடித்தாள். ‘ஏன் சமையல்காரப் பெண் நன்றாகத்தானே  சமைக்கிறாள், என்ன பிரச்சினை?’ என்று கேட்டதற்கு, எதுவும் சொல்லாமல் ஒரே அழுகை. தொடர்ந்து சில நாட்கள் இப்படியே செய்தாள். ஒருநாள் அவளை உட்கார வைத்து, மெதுவாகப் பேசிய போதுதான் அழுகைக்கான காரணம் புரிந்தது. ‘எங்க மிஸ் சொன்னாங்க... மம்மி குக்ஸ் இன் தி கிச்சன், டாடி கோஸ் டு ஆபீஸ். எல்லா வீட்லயும் மம்மி, வீட்ல இருந்து குக்தான் பண்றாங்க போலிருக்கு. இப்ப புரியுதா, நான் ஏன் உங்களை ஆபீஸ் போக வேண்டாம்ன்னு சொன்னேன்னு?’ என்றாள்.

நான் சிரித்தபடி, ‘அப்படி சொல்லிக் கொடுத்த மிஸ்கூட பணிக்குச் செல்லும் ஒரு பெண்தானே? அத்துடன்  சமையல் என்பது ஆண், பெண் இரண்டு பேரும் செய்யக் கூடிய வேலைதான். ஹோட்டல்களில் பெரும்பாலும் ஆண்கள்தான் சமைக்கிறார்கள்’ என்றேன். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் சமாதானம் ஆகவில்லை. ‘எங்க மிஸ் கரெக்டாதான் சொல்வாங்க’ என்றாள்.

விண்வெளி வீராங்கனையாக, பிரதமராக, முதல்வராக, பன்னாட்டு நிறுவனங்களின் தலைவியாக பெண்கள் பரிணமித்தபோதும் இன்னும் நம் பாடப் புத்தகங்களில் அம்மா என்பவள் சமைத்துக்கொண்டு மட்டும்தான் இருக்கிறாள்.

டி.வி. சீரியல்களும் சினிமாக்களும் எந்த அளவிற்கு குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதிக்கிறது என்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகப் பார்க்கலாம். காமெடி என்ற பெயரில் பெண்களை கிண்டல் செய்து பேசுவது, பாடுவது, ஆபாசமாக வர்ணிப்பது என்று பெண்களை  பாலியல் பிம்பங்களாகவும் காட்சிப் பொருளாகவும்தான் ஊடகங்கள் காட்டுகின்றன. எனக்குத் தெரிந்த ஒரு 10 வயது சிறுவன், சென்னையின் பிரதான அடையாளமாகக் கருதப்படும் புகழ்பெற்ற பள்ளியில் படிக்கிறான். ஒருநாள் என்னிடம், தன்னுடன் படிக்கும் மாணவிகளைப் பற்றி, ‘கேர்ள்ஸ் எல்லாம் ஒரே அறுவை ஆன்ட்டி. அவங்களுக்கு என்ன தெரியும்? நாங்க கேர்ள்ஸை ஃப்ரண்ட்ஸா சேர்க்க மாட்டோம். அவங்களைச் சீண்டி அழ வைபோம்’ என்றான். பெண் குழந்தைகளை சீண்ட வேண்டும் என்ற எண்ணத்தை 10 வயது சிறுவனுக்கு விதைத்தது யார்? தினமும் அவன் பார்க்கும் டி.வி. சீரியல்களும் சினிமாக்களும்தான்.

வீட்டில் பெண்களை மதிக்கத் தெரிந்தவன் சமுதாயத்திலும் அதே மாதிரி மனோபாவத்துடன்தான் நடப்பான். தன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று எந்தப் பெண்ணும் ஆசைப்படவில்லை. சக மனுஷியாக மரியாதையுடன், புரிதலுடன் நடத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறாள். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க எத்தனை கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் உண்மையான, ஆரோக்கியமான மாற்றம் என்பது நமது இல்லங்களிலிருந்துதான் தொடங்க வேண்டும். னியா இருக்கீங்களா? இது ஃபேமிலிக்குனு சொன்னாங்க...கேட்டு சொல்லட்டா?’ மண விலக்குப் பெற்ற அல்லது மணம் புரிந்துகொள்ளாமல், தனித்து வாழ்வதைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பெண்கள், வாடகைக்கு வீடு தேடும்போது பலமுறை கேட்கும் பரிச்சயமான குரல் இது.  ஒரு பெண்ணைத் தனி ஒரு மனுஷியாகப் பார்க்கும் கண், இந்த சமூகத்திற்கு இல்லை. அதற்குக் காரணம், அதன் அடிமனதில் இடையறாது ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் பெண் மீதான பாலியல் எண்ணங்கள்.

ஒரு பெண், ஆண் உறவுகளை விலக்கிவிட்டுத் தனித்து வாழத் தீர்மானித்தால், அதை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்கள்தான் அதிகம். ஏன் அவள் தனித்திருக்கிறாள்? காதல் தோல்வியோ? விவாகரத்தோ? ஆதரவற்ற அநாதையோ? ஆண் நண்பர்களை சந்திப்பதற்கு வசதியாகவோ என்ற கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டுதான் ஆண்கள் அவர்களை எதிர்கொள்வார்கள். அது படித்த பெரிய அதிகாரியானாலும் சரி, பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பஸ்தரானாலும் சரி.  

தனித்திருக்கும் பெண், கூப்பிட்டால் வந்து விடுபவள் என்பது சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து கிடக்கிறது. அந்தப் பெண் வரதட்சணைக் கொடுமைக்கு அஞ்சியோ, குடும்ப வன்முறைக்கு முகம் கொடுக்க விருப்பம் இன்றியோ, ஆண்களோடு ஏற்பட்ட கசப்புணர்வுகளாலோ, குடும்பச் சூழ்நிலைகளாலோ தனித்து வாழ முடிவு செய்திருக்கலாம். ஏன், தனிமையை விரும்பியே கூடத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனாலும் அவள் எதிர்கொள்ளும் ஆண்களின் கண்களில் எப்போதும் ஓர் அழைப்பு நிழலிட்டிருக்கும்.

அதனால், வீடுகளை வாடகைக்கு விடும் போது ஓராயிரம் கேள்விகள் அவள் மீது நேரடியாகவும் நாசூக்கு முலாம் பூசப்பட்ட வார்த்தைகளும் அவள் மீது வீசப்படும். மாலை இத்தனை மணிக்குள் வந்து விட வேண்டும், பார்ப்பதற்கு ஆண்கள் யாரும் வரக்கூடாது என்றல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்படும். உடல் நலம் குன்றி, மருத்துவமனைக்குப் போகும் சூழலில் கூட அந்தப் பெண் இன்னொரு பெண்ணைத்தான் அழைக்க நேரும்.

அலுவலக சகாக்களிடம் அவள் சந்திக்க நேரும் விஷமங்கள் வேறு ரகம். சினிமாவிற்குப் போகலாமாவில் துவங்கி, ஒரு பிரேக் எடுத்துட்டு ஒரு நாள் எங்கேயாவது போயிட்டு வருவோமே வரை எத்தனையோ தூண்டில்கள் வீசப்படும்.அந்தப் பெண் அதிகாரியாக இருந்துவிட்டால், அவளைப் பற்றி கிசு கிசு கிளப்புவதற்கே ஒரு குழு ஓயாமல் வேலை செய்யும். அவளது ஒவ்வொரு நடவடிக்கையும் உளவு பார்க்கப்படும். ஒவ்வொரு செயலுக்கும் உள்நோக்கம் கற்பிக்கப்படும். அவள் என்றாவது கோபத்தில் குரல் உயர்த்திப் பேசினால், அதற்கு அவளது தனிமை, காரணமாகச் சொல்லப்படும்.

இன்னொரு வகை ஆண்கள் இருக்கிறார்கள். அனுதாபம் காட்டியே அவளைக் கொல்வார்கள். ஏதோ மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பார்ப்பதுபோல தனிமையில் வாழும் பெண்கள் மீது கருணை கசியப் பார்ப்பார்கள்.

ஏன் இப்படி? அது ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத விஞ்ஞான சூத்திரம் அல்ல. பெண் என்பவள் ஆணோடு சேர்ந்து வாழக் கடமைப்பட்டவள், அவளுக்கென்று தனி அடையாளங்கள் கிடையாது, அப்படி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்பது சமூகத்தின் பொதுப் புத்தியில் புதைந்து கிடக்கும் விஷயம்.  கல்வெட்டுபோலப் பொறிக்கப்பட்டு, காலங்காலமாய் காப்பாற்றி வரும் விஷயம். ஆனால், அவள் ஒரு மனுஷி. அவளுக்கு மனம் உண்டு, கல்வி உண்டு, அனுபவங்கள் உண்டு, அவை தந்த தீர்மானங்கள் உண்டு என்பது இங்கு இன்னும் அங்கீகரிக்கப்படாத யதார்த்தம்.

 இந்த சமூகத்தில் நாம் தனித்திருக்கும் பெண்கள் குறித்து யோசித்தது இல்லை. அவர்கள் வாழ்வின் நெருக்கடிகள் குறித்து விவாதித்தது இல்லை. பேசப்படாத வார்த்தைகள் நெஞ்சுக் கூட்டில் எஞ்சி இருக்க, அவர்கள் மரணித்தும் போகிறார்கள் தனிமையில்.இனம், நிறம், பாலினம், மதம், அரசியல், தேசிய நிலை, சமுதாய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பணி மற்றும் தொழிலில் முன்னுரிமை அளிப்பதோ, பாரபட்சத்தால் வாய்ப்பு வழங்க மறுப்பதோ கூடாது. பணியிலும் தொழிலிலும் சமவாய்ப்பு வழங்கவும் சமமாக நடத்தவும் வேண்டும். ஒரே மாதிரியான தொழில் செய்யும் ஆண் அல்லது பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.

சம ஊதிய நெறிமுறைக்கான விதிகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உருவாக்கப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், இந்தியாவில் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஓட்டுரிமை போன்ற ஒருசில உரிமைகள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், சம வேலைக்கு சம ஊதியம் என்பது உட்பட பெரும்பாலான உரிமைகளில் சமத்துவமின்மை என்ற நிலை கட்டுக்கோப்பு கலைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டே வருகிறது.

மத்திய, மாநில அரசுப்பணிகள் மற்றும் அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் சம வேலைக்கு சம ஊதியம் என்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், அங்கு ஆண்களுக்கு நிகரான பணிகளில் இருக்கக்கூடிய பெண்களின் விகிதாச்சாரம் என்பது குறைவாகவே உள்ளது. இந்திய அளவிலான மொத்தத் தொழிலாளர்களில்,  அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் அல்லது பணிகளில் வேலை செய்வோரின் எண்ணிக்கை வெறும் 6 சதவிகிதம்தான். மீதமுள்ள 94 சதவிகிதம் பேர், அமைப்புசாரா பணிகளிலேயே உள்ளனர். அவர்கள், பணிப்பாதுகாப்பு உட்பட எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தினக்கூலிகளாக உள்ளனர். அவர்களில் 67 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியின்மை, அறியாமை, திறமையை வளர்த்துக்கொள்ள இயலாமை போன்ற காரணங்களால் அமைப்புசாரா தொழில்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். அங்கு சம வேலைக்கு சம கூலி என்பது கிடையாது.

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நம் நாட்டில், விவசாயத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஏராளம். நாற்று நடுதல், களை எடுத்தல், நாற்றுக்கட்டு மற்றும் நெல் மூட்டைகளை தலையில் சுமத்தல் போன்ற வேலைகளை அவர்கள் செய்கின்றனர். குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய வேலைகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் செய்யும் பணியின் தன்மை கூடுதல் பளுவுடையது. ஆனால், ஆண் தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலியில் பாதிதான் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

கட்டுமானத்தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். செங்கல், மண், சிமெண்ட் கலவை போன்றவற்றை சுமந்து செல்வது, கலவை போடுவது, ஆண் கொத்தனார்களுக்கு அத்தனை வேலைகளிலும் உதவி செய்வது போன்ற வேலைகளை பெண்கள்தான் செய்கின்றனர். அவர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயரோ, ‘சித்தாள்’. ஆண் தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலியில் மூன்றில் ஒரு பகுதி கூட இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்தக் கூலி முரண்பாடு, மாவட்டத்திற்கு மாவட்டம், ஊருக்கு ஊர் மாறுபடுகிறது.

விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழில் ஆகியவை தவிர மற்ற வேலைகளில் ஊதிய முரண்பாடு என்பது பெரிதாக இருப்பதில்லை. மற்ற அமைப்புசாரா தொழில்களைப் பொருத்தளவில் வேலையின் அளவைப் பொருத்து கூலி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு வேலையை ஆண் செய்தாலும், பெண் செய்தாலும் ஒரே கூலிதான். ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், கடின உழைப்பும் பொறுமையும் கூடுதல் நேரமும் பிடிக்கக்கூடிய இந்த வேலைகளை பெரும்பாலும் பெண்கள் மட்டுமே செய்துவருகிறார்கள். இந்த வேலைகளைச் செய்வதற்கு ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பீடி சுற்றுதல், கல்குவாரி, செங்கற்சூளை, அப்பளம், பட்டுநெசவு, அரிசி ஆலைகள், உப்பளம் போன்ற தொழில்கள் சில உதாரணங்கள்.

தோல் பதனிடும் தொழில்களில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயனம் கலந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி, தோலை சுத்தம் செய்யும் வேலையை பெண்கள் செய்கின்றனர். உப்பளங்களில் வெறுங்காலுடன் இறங்கி, உப்பைக் குவியலாக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அனல்மின் நிலையங்களில் குவியல் குவியலாக விழுகிற, அனல் பறக்கும் சாம்பலில் இருந்து கரியைப் பொறுக்கும் வேலையை பெண்கள் மட்டுமே செய்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களான அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு, காலமுறை ஊதியம் என எதுவும் கிடையாது. கரியைப் பொறுக்கிக்கொண்டிருந்தபோது, அனல் தகிக்கும் சாம்பல் விழுந்து உயிரிழந்த பெண்களும் உண்டு. இத்தகைய ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் பெண்களின் உடல் ஆரோக்கியம் இளம் வயதிலேயே கெட்டுவிடுகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரமாண்டமான ஜவுளிக்கடைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து இளம் பெண்கள் அழைத்துவரப்படுகின்றனர். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை, அதாவது ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலைவாங்கப்படுகின்றனர். உட்காரக்கூட நேரமில்லாமல் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். அவர்களின் மாதச் சம்பளம் 5-6 ஆயிரம் மட்டுமே. விடுமுறையே கிடையாது. ஒருநாள் விடுமுறை எடுத்தாலும் சம்பளம் பிடிக்கப்படும். இதைப்போலவே இன்னொரு கொடுமை, சுமங்கலி திருமணத்திட்டம் என்ற பெயரில் பஞ்சாலைகளில் நடைபெறும் மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல். ‘மூன்று வருட ஒப்பந்தம்.

30 ஆயிரம் ரொக்கப்பணம்’ என்று ஆசைவார்த்தை காட்டி, அப்பாவி இளம் பெண்களை அழைத்துச் சென்று உழைப்பை உறிஞ்சுகின்றனர் பஞ்சாலை உரிமையாளர்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான ஊதியத்தில் முரண்பாடு கூடாது என்பதற்கான விதிகளை சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கி இருந்தாலும், அதனை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு சட்டவடிவமாக்கி, முறையாக அமல்படுத்தினால் மட்டுமே பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக