Powered By Blogger

வெள்ளி, 11 ஜனவரி, 2013

தமிழகத்தில் பணியாற்றும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, துறைக்குத் துறை, சம்பளம் வேறுபடுவதால், விரக்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், பொது வினியோகத்துறையில், வருவாய், கூட்டுறவு, நுகர் பொருள் வாணிப கிடங்கு என, மூன்று துறைகள் செயல்படுகின்றன. பொருட்களை ஒதுக்கீடு செய்வோர் வருவாய் துறையினர்; ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்களை, ரேஷன் கடைக்கு வழங்குவது, நு1கர் பொருள் வாணிப கழகம்; பொருட்களை கடைகளில் வினியோகம் செய்வது கூட்டுறவுத்துறை.

சம்பளம் வேறுபாடு:ரேஷன் கடைகளை, கூட்டுறவுத்துறை, நுகர் பொருள் வாணிப கழகம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்துகின்றன . இதில் பணியாற்றும் விற்பனையாளருக்கு, 
துறைக்குத் துறை, சம்பளம் வேறுபாடு உள்ளது. பெரும்பான்மையான கடைகளை கூட்டுறவுத் துறை தான் நடத்துகின்றன.
இதில், ரேஷன் விற்பனையாளருக்கு, மாத சம்பளம், 4 ஆயிரம் ரூபாய்; 30 ஆண்டுகள் பணியாற்றியோர், அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் நடத்தப்படும் கடைகளில், குறைந்த பட்ச சம்பளம், 8 ஆயிரம் ரூபாய் முதல் வழங்கப்படுகிறது.அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.

பணிச்சுமை அதிகரிப்பு:மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் கடைகளில், கிடைக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்து, சம்பளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே பணியை செய்யும் ரேஷன் விற்பனையாளருக்கு,
சம்பளத்தில் மட்டும் துறைக்குத் துறை வித்தியாசம் உள்ளது.குறைந்த சம்பளத்தில், பணியாற்றும் பணியாளர்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது. பொருட்கள் வினியோகம் தவிர்த்து, இலவச, வேட்டி சேலை வினியோகம், கேபிள் "டிவி' கணக்கெடுப்பு என, பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது.

ஆனால், அதற்கேற்ற சம்பளம் வழங்கப் படுவதில்லை. இதனால், ரேஷன்கடைகளில், கூட்டுறவுத்துறையில் பணியாற்றுவோர் விரக்தியில் உள்ளனர்.ரேஷன் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "ரேஷன் விற்பனையாளர் அனைவரும், ஒரே பணியில் தான் உள்ளோ.
இருந்தும், பல ஆண்டுகள் பணியாற்றினாலும்,10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பள உயர்வு இல்லை. கூடுதல் பணியால் தவிக்கிறோம். அனைத்து விற்பனையாளர்களுக்கும் வேறுபாடு இல்லாமல், சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக