Powered By Blogger

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

Microsoft உங்களுக்கு தெரியாதவை


Microsoft  உலகின் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் வின்டோஸ் இந்த நிறுவனத்தினுடையதுதான்.இந்த நிறுவனத்தைப்பற்றித்தான் ஆரம்ப ஐ.டி மாணவர்களுக்கு சிலபஸ்சே இருக்கும்.உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் . கணினிக்குத் தேவையான பல  மென்பொருட்களை தயாரிப்பது, மேம்ப்படுதுவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்றவற்றை செய்கிற நிறுவனம். 2010 இல் இன் நிறுவனத்தின் வருமானம் 62.48 பில்லியன்.இன் நிறுவனத்தின் இன்டெர்னெட் எக்ஸ்ஃப்ளோர்9 வெளியிடப்பட்டு 1 நாளில் 2.35 மில்லியன் மக்களால் டவுன்லோட் செய்யப்பட்டது.சரி இவையெல்லாம் சாதாரணமாக சகலருக்கும் தெரிந்தவிடயங்கள்.தெரியாதவிடயங்களைப்பார்ப்போம்.

1.மைக்ரோசாப்ட்டின் இயங்குதளங்களில் உங்களால் “Con” அல்லது  “con” என்ற பெயரில் போல்டர்களை உருவாக்கமுடியாது.முயற்சி செய்துபாருங்கள்.நீங்கள் மேற்கூறிய பெயர்களில் போல்டரைஉருவாக்கினால் எச்சரிக்கை ஒலியுடன் எறர் மெசேஜ்தோன்றும்.


ஒரே செக்கண்டில் 4 லட்சம் வார்த்தைகளை மைக்குரோசொஃப்ட் வேர்ட்டில் உருவாக்கமுடியுமா?முடியும்.வேர்ட்டை ஓபின் செய்ததும் =rand(200,99) என்று டைப் செய்யுங்கள் அதன் பின்னர் என்ரர் கீயை அழுத்துங்கள்.அவ்வளவுதான் 4 லட்சம் வார்த்தைகள் ரெடி ஏதோ ஒரு சில கணிப்புகளின் பின் இது வெளிவருவதாக தெரிகின்றது.(இதை உங்கள் நண்பர்களிடம் ஒரே செக்கண்டில் உருவாக்கமுடியுமா? என்று கூறி கலாய்க்கலாம் ஆனால் சமன்பாடு நினைவில் இருக்கவேண்டும்)


முதல்முதலில் Microsoft என்றபெயரை பில்கேட்ஸ் ஒரு கடிதத்தில்தான் குறிப்பிட்டிருந்தார்.பில்கேட்ஸ் Microsoft இன் இணை ஸ்தாபகரான Paul Allen  இற்கு 1975 இல் அனுப்பிய கடிதத்திலேயே இதைக்குறிப்பிட்டிருந்தார்.
microcomputer ,software  என்பதன் குறியீட்டுப்பதமே Microsoft 1976 இல் Microsoft என்றபெயர் பதிவு செய்யப்பட்டது.


Microsoft இன் லோகோக்கள் பலதடவைகள் மாற்றப்பட்டுள்ளன.அண்மையிலும் Microsoft லோகோவை மாற்றியுள்ளது.

Microsoft வின்டோஸ் 95 இன் ஸ்ரார்டிங்க் டியூனை உருவாக்கியவர் Brian Eno



கூகிள் அளவிற்கு இல்லாவிடினும் Microsoft  வருடத்திற்கு 23 மில்லியன் இலவச பானங்களை தனது  நிறுவன வளாகங்களில் வழங்குகின்றது. நாளொன்றுக்கு 37 000 நபர்களுக்கு இலவசமாக பானங்களை வழங்கக்கூடிய 35 உணவகங்களை Microsoft  தன்வசம் கொண்டுள்ளது.


Microsoft  தனது முதலாவது ஒப்பிரேட்டிங்க் சிஸ்ரத்தை உருவாக்கியதில் இருந்து இன் நிறுவனம் தனது சொஃப்ட்வேர் படைப்புக்களுக்கு கோட் நேம்களை வைத்துள்ளது.அதாவது அந்த குறிப்பிட்ட விண்டோஸ் ,சொஃப்ட்வேர் உருவாக்கப்படும்போது அந்த கோட் நேமினால் அழைக்கப்படும்.பின்னர் அதை வெளியிடும்போது நாம் பயன்படுத்தும் பெயர் வைக்கப்படும்.உதாரணம் விண்டோஸ் 7 இன் பெயர் Blackcomb .பின்னர் எமக்காக அது விண்டோஸ் 7  என்று பெயர் மாற்றமடைந்தது. விக்கியில் ஒரு லிஸ்டே இருக்கின்றது.இங்கே கிளிக்

Microsoft இல் பணிபுரியும் பணியாளர்கள் தம்மை Softie என்று அழைத்துக்கொள்கின்றார்கள்.ஒரு Softie யின் சராசர் வருமானம் எவ்வளவு தெரியுமா? $106,000 கள்.32,404,796  சதுர அடிபரப்பில் அமைந்துள்ள Microsoft வளாகத்தில் மொத்தமாக 88,180 பணியாளர்கள் பணிபுரிகின்றார்கள்.


Microsoft நிறுவனம் நவீனகால ஆர்ட் கலக்ஸன்களை தனது அலுவலகத்தில் நிறைத்துவைத்துள்ளது அண்ணளவாக 50 000 வரைபடங்கள்,சிற்பங்கள்,பீங்கானால் ஆன பொருட்கள்,காகிதத்தால் ஆன பொருட்கள் என்பவற்றை அலுவலகத்தில் பரப்பி வைத்துள்ளது.தனது பணியாளர்களுக்கு ரிலாக்ஸாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு இவைகளைப்பற்றிய கலந்துரையாடல்களும் இடையிடையில் நடப்பதுண்டு.

Microsoft நிறுவனம்தான் நேர்முகத்தேர்வுகளில் அதிக கடினமான கேள்விகளைக்கேட்கின்றது."சாக்கடை மூடும் மூடி ஏன் வட்டமாக இருக்கின்றது?" 5 வருடங்களின் பின் உங்கள் பதவி என்னவாக இருக்கும்?
விண்வெளிவீரர்கள் பயன்படுத்தும் கொஃபிமேக்கரை டிஸைன் செய்யவும்.இப்படிக்கேட்கின்றது Microsoft.

Microsoft 10 000 காப்புரிமைகளை தொகுப்புக்களை தன்வசம் வைத்துள்ளது.வருடத்திற்கு 3000 காப்புரிமை தொகுப்புக்கள் சேரும்.அமெரிக்காவின் டொப்  5 காப்புரிமை உரித்துடையவ்ர்களில் இன் நிறுவனமும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக