Powered By Blogger

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

விபத்து காப்பீடு (பள்ளிக் கல்வித் துறை)

விபத்து காப்பீடு (பள்ளிக் கல்வித் துறை)

அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12ம வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ/மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50000/- நிதி வழங்குதல்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு அதில் கிடைக்கின்ற வட்டித்தொகை மற்றும் அதன் முதிர்வு தொகை ஆகியவை அந்த மாணவ/மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

தகுதிகள்

1. அரசு/உதவிபெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் வேண்டும்.

2. வருமானம் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ/மாணவியர் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்

1. விண்ணப்ப படிவம்

2. இறப்புச் சான்று

3. வருவாய் ஈட்டும் தாய்/தந்தை நிரந்தர முடக்கம் அடைந்தவராக இருந்தால் அரசு மருத்துவ மனையின் உதவி சிவில் சர்ஜனிடமிருந்து அதற்கான பெற்று இருக்க வேண்டும்.

4. முதல் தகவல் அறிக்கை

5. கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கை.

6. குடும்ப அட்டை நகல்

7. வாரிசு சான்று

8. வருமானச் சான்று

9. பிரேத பரிசோதனை அறிக்கை

10. இறந்தவரின் வாரிசுதாரர் மற்றும் மாணவ/மாணவியரின் பெயரில் துவங்கப்பட்ட கூட்டுக் கணக்கு விவரம்.

11. தலைமையாசிரியர் சான்று

12. மாவட்ட கல்வி அலுவலரின் சான்று.

தொடர்பு அலுவலர்/துறை

விண்ணப்பம் பள்ளித் தலைமையாசிரியரிடம் கொடுக்க வேண்டும். தலைமையாசிரியர் அதனை பரிசீலித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்க வேண்டும். பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாடு நிறுவனத்திற்கு முதன்மை கல்வி அலுவலரால் அனுப்பி வைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக